இலங்கையில் சீரற்ற காலநிலை – வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட தகவல்

ஹங்வெல்ல பிரதேசத்தில் 260.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
குறித்த பிரதேசத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் இவ்வாறு மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அஹெலியகொட பிரதேசத்தில் 211 மில்லிமீற்றர் மற்றும் 5 பத்தில் மழை பதிவாகியுள்ளது, வட்டுப்பிட்டி 203 மற்றும் 5 பத்தில் பதிவாகியுள்ளது மற்றும் அவிசாவளை பிரதேசத்தில் 200 மில்லிமீற்றர் மற்றும் 5 பத்தில் மழை பதிவாகியுள்ளது.
இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, தீவின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.