பிரான்ஸில் வீட்டின் அடித்தளத்தை புனரமைப்பு செய்ய முற்பட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி : வெளிவரும் கல்லறைகள்!
பிரான்ஸில் நபர் ஒருவர் தனது வீட்டின் அடித்தளத்தை புதுப்பிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது புதைக்குழி ஒன்றை கண்டுப்பிடித்துள்ளார்.
பாரிஸுக்கு அருகில் அமைந்துள்ள குறித்த வீட்டின் அடித்தளத்தில் கல்லறையுடன் கூடிய சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எலும்புக்கூடுகளில் மிகப் பழமையானது கி.பி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சுமார் 1,700 ஆண்டுகளுக்கு முன்பு ரோமானியர்கள் பிரான்ஸை ஆண்டபோது இந்த புதைக்குழி உருவாக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஃபிராங்கிஷ் ஆட்சியின் ஆரம்பகால மெரோவிங்கியன் காலத்தைச் சேர்ந்த மற்றொரு 10 பிளாஸ்டர் சர்கோபாகிகளும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இது கி.பி 476 முதல் 750 வரையான காலப்பகுதியை சேர்ந்ததாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
குறித்த பகுதியில் தேவாலயம் ஒன்றும் இருந்திருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பிரெஞ்சு தொல்லியல் நிறுவனமான ஆர்க்கியோடுனத்தின் அறிக்கையின்படி, இதுவரை 38 கல்லறைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.