இஸ்ரேல் – ஹமாஸ் போர் : 42,000 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் படுகொலை!

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றொரு கடுமையான மைல்கல்லை கடந்துள்ளது.
இந்த போரில் 42,000 க்கும் அதிகமான பாலஸ்தீனியர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 97,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் மீது “முழு வெற்றி” பெறும் வரையிலும், போரை முன்னெடுப்போம் என இஸ்ரேல் முழங்கி வருகிறது.
அக்டோபர் 07 அன்று ஆரம்பமான இந்த தாக்குதலை நிறுத்தக்கோரி பல்வேறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 20 times, 1 visits today)