கடந்த 4 நாட்களில் ரஷ்யா மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில், 100 பேர் உயிரிழப்பு!
உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய வான்வழித் தாக்குதல்களில் கடந்த 4 நாட்களில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில், ஐந்து குழந்தைகளும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
“உக்ரைனில் என்ன நடக்கிறது என்பதை அமெரிக்கா ஒருபோதும் பார்த்துக் கொள்ளாது” என்று வெளியுறவுத்துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறினார்.
கிரெம்ளின் மீதான ட்ரோன் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ள நிலையில், அமெரிக்கா இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் இன்னும் ட்ரோன் சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)