உடல் பருமனை குறைக்க உதவும் காலை பழக்கங்கள்
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உடல் மிக அவசியமாகும். நமது உடல் ஃபிட்டாக, சரியான எடையுடன், ஆரோக்கியமான இருந்தால் தான் நம்மால் நமக்கான பணிகளை சரியாக செய்ய வேண்டும். உடல் பருமன் இந்நாட்களில் பலரை பாடாய் படுத்தும் பிரச்சனையாக உருவெடுத்து வருகின்றது.
தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து, கலோரிகளை வேகமாக எரித்து உடல் எடையை குறைக்க காலையில் சில பழக்க வழக்கங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவற்றை பற்றி இங்கே காணலாம்.
காலை உணவு ஒரு நாளின் மிக முக்கியமான உணவாக பார்க்கப்படுகின்றது. காலையில் சமச்சீரான, புரதம், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். காய்கறி, பழச்சாறுகள், முட்டை, ஓட்ஸ், சாலட் போன்றவை சிறந்த காலை உணவுகளாக கருதப்படுகின்றன. இவை நாள் மூழ்தும் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிகின்றன.
உடல் கொழுப்பை கரைக்க இது ஒரு சிறந்த வழியாக கருதப்படுகின்றது. நாம் அனைவரும் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்போம். அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீரைக் குடிக்கும்போது அது உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது செரிமானத்தை மேம்படுத்தி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் கலோரிகளை வேகமாக எரிக்க முடியும்.
நம்மில் பெரும்பாலானோர் காலையில் தேநீர் குடிக்கிறோம். அதில் பால் சேர்ப்பதற்கு பதிலாக கிரீன் டீ, இலவங்கப்பட்டை டீ, சீரகம் டீ, ஓம தேநீர், சோம்பு டீ போன்ற மூலிகை தேநீர் வகைகளை உட்கொள்ளலாம். அது உடல் கொழுப்பைக் கரைக்க பெரிதும் உதவும்.
நீண்ட நேரம் வயிறு நிரம்பவும், பசியைக் கட்டுப்படுத்தவும், காலை உணவில் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, பசியைக் குறைத்து, தசைகளை அதிகரிக்க உதவுகிறது.
காலை வேளையில் செய்யப்படும் பயிற்சி உடலில் சேரும் கொழுப்பைக் கரைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, காலையில் நடைபயிற்சி, யோகா, ஓட்டப்பயிற்சி, உடற்பயிற்சி என ஏதாவது ஒரு வகையான செயல்பாட்டில் கண்டிப்பாக ஈடுபட வேண்டும். இது தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைக்கவும் உடல் எடையை இழக்கவும் மிகவும் பயனுள்ள வழியாக பார்க்கப்படுகின்றது.
காலையில் விரைவில் எழுந்திருப்பது உடல் எடையை குறைக்க ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகின்றது. இரவு தூங்கும் நேரத்தையும் காலையில் விழிக்கும் நேரத்தையும் பிக்ஸ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை கடைபிடிப்பது உடலின் சீரான இயக்கத்திற்கு நல்லது.போதுமான தூக்கம் இல்லாதபோது உடல் பருமன் அதிகமாகின்றது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஆரோக்கியமான மனப்போக்கும் அவசியமாகும். நாம் உடல் எடையை குறைக்க டயட் பிளான், ஜிம் என பல திட்டங்களை தீட்டினால் மட்டும் போதாது. இதில் நாம் அதிகப்படியான அர்ப்பணிப்பையும் நிலைத்தன்மையையும் காட்ட வேண்டும். அப்போதுதான் எடை இழப்புக்கான நமது கனவு நிஜமாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.