இலங்கை வரும் IMF குழுவினர் : புதிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாட திட்டம்!
சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை மற்றும் IMF வேலைத்திட்டத்தின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று ஒக்டோபர் 2 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தலைமையில் குழுவானது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்திக்கவுள்ளது.
முன்னதாக இலங்கையின் புதிய அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்துடனான கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)