சீனாவில் பெண்ணுக்கு நடந்த அதிசயம் – மில்லியனில் ஒருவருக்கு நடக்கும் அரிய சம்பவம்

சீனாவில் 2 கருப்பைகளோடு பிறந்த பெண் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த அரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அந்த அரியவகை நிலையுடன் பிறந்த அவருடைய கருப்பை ஒவ்வொன்றிலும் கரு உண்டாகியிருந்தது.
உலகத்திலேயே 0.3 சதவீத பெண்களுக்கு மட்டுமே அப்படி ஒருநிலை ஏற்படும். அவற்றுள் 2 கருமுட்டைகள் இருப்பது அரிதாகும்.
வெற்றிகரமாகக் குழந்தைகளைப் பெற்றெடுப்பது அரிதினும் அரிதாகும். இம்மாதத் தொடக்கத்தில் அந்தப் பெண் ஓர் ஆண், ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தார்.
இதற்கு முன் அவர் கர்ப்பமுற்றபோது அடையாளம் காணப்படாத காரணங்களால் அவருடைய கரு 27 வாரங்களில் கலைந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 48 times, 1 visits today)