ஹிஸ்புல்லாஹ் தலைவரின் படுகொலையை தொடர்ந்து மத்திய கிழக்கில் மேலும் உக்கிரமடையும் பதற்றம்!

ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் இன்று காலை வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இந்த தாக்குதலில் 90 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஹிஸ்புல்லா தலைமை பெய்ரூட்டின் தெற்கே உள்ள தஹியேவில் உள்ள அவர்களின் தலைமையகத்தில் கூடிக் கொண்டிருந்த போது துல்லியமான வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஹிஸ்புல்லாவின் தெற்கு முன்னணியின் தளபதி அலி கார்க்கி மற்றும் கூடுதல் குழு தலைவர்களும் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
பேரழிவுகரமான வான்வழித் தாக்குதலில் ஆறு கட்டிடங்கள் அழிக்கப்பட்டன. அத்துடன் டஜன் கணக்கானவர்கள் படுகாயமடைந்ததுடன், குறைந்தது 06 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 46 times, 1 visits today)