இலங்கையில் வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு
இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்யும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியினால் இன்று அழைப்பு விடுக்கப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், மத்திய வங்கியிடம் தேவையான பண கையிருப்பு இருப்பதாக தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள 11 வேலைத்திட்டங்களை துரிதமாக ஆரம்பிக்க ஜப்பான் அரசாங்கம் பூரண ஆதரவை தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்த ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படையான திட்டத்திற்கு முழுமையாக ஆதரவளிக்க கொரிய அரசும் தனது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
(Visited 17 times, 1 visits today)