அமெரிக்காவில் பேருந்தைக் கடத்திய மர்ம நபர் – ஒருவர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பேருந்தைக் கடத்திய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதிகாலை 1 மணியளவில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் பேருந்தில் ஏறி ஓட்டுநரிடம் பாதை மாறிச் செல்லுமாறு சொல்லியிருக்கிறார்.
பேருந்து கடத்தப்பட்டிருப்பதாகத் தகவலறிந்த பொலிஸார் சுமார் ஒரு மணி நேரம் அந்தப் பேருந்தைத் துரத்தியது.
கடைசியில் பேருந்தை நிறுத்திச் சுற்றிவளைத்து துப்பாக்கி வைத்திருந்த நபரை கைதுசெய்தது.
பேருந்து ஓட்டுநரும் பயணி ஒருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
துப்பாக்கியால் பல முறை சுடப்பட்ட மற்றொரு பயணி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவர் உயிரிழந்தது அங்கு உறுதிசெய்யப்பட்டது.
(Visited 18 times, 1 visits today)