உலகம் செய்தி

இஸ்ரேல்-லெபனான் மோதல் – 21 நாள் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் அழைப்பு

காசா போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் களமிறங்கினர். இஸ்ரேல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தினர்.

இதற்கு பதிலடியாக லெபனான் மீதும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. கடந்த சில தினங்களாக இந்த தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் கடந்த திங்கள்கிழமை லெபனானின் தெற்கு பகுதி நகரங்களை தாக்கியது.

குறிப்பாக, லெபனானின் ஹெர்மல், பிப்லோஸ், பால்பெக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதை இஸ்ரேல் உளவுத் துறை கண்டறிந்ததையடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய வான் தாக்குதல்களில் லெபனானில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் லெபனான்-இஸ்ரேல் இடையே முழு அளவிலான போர் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

இந்நிலையில், லெபனான்-இஸ்ரேல் எல்லையில் உடனடியாக 21 நாட்கள் போர்நிறுத்தம் செய்ய வேண்டும் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் அதன் நட்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.

போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தையை வலியுறுத்தி கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், சமீபத்திய தாக்குதல்கள் பொறுத்துக்கொள்ள முடியாதது என்றும், ஏற்றுக்கொள்ள முடியாத அபாயத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் லெபனான் அரசாங்கங்கள் உட்பட அனைத்து தரப்பும் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அமெரிக்கா மற்றும் பிரான்சின் தரப்பில் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்தம் ஒரு முன்மொழிவு மட்டுமே என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் கூறி உள்ளது. பிரதமரும் இந்த முன்மொழிவுக்கு பதிலளிக்கவில்லை.

(Visited 58 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி