செய்தி தமிழ்நாடு

18 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலை கடை

செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சியில்,

திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையும்,

6 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழற்குடை ஆகியவற்றின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் திருப்போரூர் எம் எல் ஏ எஸ்.எஸ்.பாலாஜி,

திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மன் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் திவ்யா வினோத் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன்,

ஊராட்சி மன்ற துணை தலைவர் பாஸ்கரன்,வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

(Visited 12 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி