செய்தி தமிழ்நாடு

கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேகம்

மணமேல்குடி,தாலுகா நாட்டாணி கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ நந்தனவிநாயகர்,

ஸ்ரீ பூரண புஷ்கல அம்பிகை சமேதஸ்ரீ சதுர முடைய அய்யனார் ஆலயத்தில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அந்த கிராமத்தார்களால் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 02ம் தேதி செவ்வாய்கிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.

அதனை தொடர்ந்து 3நாட்களாக 4கால யாக பூஜை நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தைக் காண திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள்,ஆன்மீக மெய்யன்பர்கள் சாமி அருள் பெற்றுச் சென்றனர்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

(Visited 18 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி