லேக் ஹவுஸ் தலைவராக காமினி வருஷமன கடமைகளைப் பொறுப்பேற்றார்

சோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஆஃப் சிலோன் லிமிடெட் (லேக் ஹவுஸ்) இன் புதிய தலைவராக காமினி வருஷமன இன்று உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
களனிப் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான காமினி வருஷமான சண்டே ஒப்சர்வர் பத்திரிகையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
களனிப் பல்கலைக்கழகத்தில் வெகுஜன தொடர்பாடலில் முதுமாணிப் பட்டத்தையும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
வருஷமான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மற்றும் கமிதிரிய வேலைத்திட்டம் போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய பரந்த நிர்வாக மற்றும் ஆராய்ச்சி அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)