வேளாங்கண்ணி மாதா கோவில் போன்று தனி பாடல்
சென்னை அடுத்த குரோம்பேட்டை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற நூறாண்டு பழமையான அமல அன்னை ஆலயத்தின் 63 ஆம் ஆண்டு விழா இன்று தொடங்கி வரும் 5-ம் தேதி வரை நடைபெறும்.
விழாவின் தொடக்கமாக இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகல்கேணி பகுதியில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட அமல அன்னை ஆலயத்தின் கொடியானது பூஜிக்கப்பட்டு இன்று கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
வேளாங்கண்ணி அன்னை மாதா கோவில் போன்று அமல அன்னை அலையத்திற்குகென கொடியேற்ற பாடல் ஒன்று உருவாக்கப்பட்டு,
முதல்முறையாக அந்த பாடல் ஒலிக்கப்பட்ட நிலையில் அமல அன்னை ஆலயத்தில் 63 ஆம் ஆண்டு திருவிழா கொடியானது இன்று ஏற்றப்பட்டுள்ளது.
பங்குத்தந்தை பாக்கிய ரெஜிஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற 63 ஆம் ஆண்டு திருவிழாவில் ஏராளமான கிருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
(Visited 20 times, 1 visits today)





