ஐரோப்பாவை உலுக்கிய வெள்ளம் – 24 பேர் உயிரிழப்பு – 11 பில்லியன் டொலர் நிதி உதவி
ஐரோப்பாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 11 பில்லியன் டொலர் உதவிநிதியை அறிவித்திருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தால் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. போரிஸ் (Boris) புயல் காரணமாக கனத்த மழையும் பலத்த காற்றும் ஐரோப்பாவை ஆட்டிப்படைக்கின்றன
குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சில இடங்களில் வெள்ளம் மோசமாகும் நிலை தொடர்வதாக அதிகாரிகள் கூறினர்.
நெடுங்காலம் இல்லாத அளவுக்குக் கிழக்கு, மத்திய ஐரோப்பா பாதிக்கப்பட்டிருக்கிறது.
இத்தாலியில் பல ஆறுகள் கரை கடந்ததைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்.
17 பேர் உயிரிழந்துள்ளனர். பில்லியன்கணக்கான டொலர் சேதம் ஏற்பட்டது. போலந்தில் வீடுகளும் போக்குவரத்து வசதிகளும் கடுமையாகச் சேதமடைந்தன.
சில இடங்களில் மக்கள் குடிநீர், மின்சார வசதி இல்லாமல் தவிக்கின்றனர். இராணுவம் உதவிப்பணியில் ஈடுபட்டிருக்கிறது.