இலங்கை ஜனாதிபதி தேர்தல் : சிறப்பு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு!

இலங்கையில் இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக நாளை (20) கூடுதல் தொலைதூர சேவை பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் திரு.லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தனியார் பஸ் ஊழியர்கள் கிராமங்களுக்கு சென்று வாக்களிப்பதால் தனியார் பஸ் சேவையில் குறைப்பு ஏற்படக்கூடும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
(Visited 37 times, 1 visits today)