அறிந்திருக்க வேண்டியவை

பூமிக்கு கிடைக்கவுள்ள மற்றொரு நிலவு – விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்

பூமிக்கு இந்த வருடத்தில் மற்றொரு நிலவு கிடைக்கப்போகிறது என தெரிவிக்கப்படுகின்றது.

தற்காலிக நிலவாக இது கிடைக்கும் என்ந தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் 7ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட 10 மீற்றர்கள் [33 அடி] உள்ள சிறு கோளுக்கு Asteroid 2024 PT5 என்று பெயரிடப்பட்டது.

இந்த சிறுகோளானது 2024 செப்டம்பர் 29 முதல் 2024 நவம்பர் 25 வரை பூமிக்குச் சிறு நிலவாக [mini-moon] செயல்பட உள்ளது.

இந்த குறுகிய காலகட்டத்திற்கு மட்டும் பூமியின் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு இந்த சிறுகோள் பூமியைச் சுற்றும்.

ஆனால் ஒரு முறை முழு சுற்றை நிறைவு செய்யும் முன்னரே [அதாவது நவம்பர் 25க்கு பின்னர்] பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபட்டுச் சூரியனைச் சுற்றத் தொடங்கும்.

மிகவும் சிறிய அளவில் உள்ளதால் பூமியைச் சுற்றும் காலகட்டத்தில் இதை வெறும் கண்களால் பார்ப்பது சிரமம் என அமெரிக்க ஆஸ்ட்ரோனாமிகள் சமூக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு NX1 என்ற சிறு நிலவு பூமியைச் சுற்றியது, குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.
error: Content is protected !!