உயிர்களைக் காப்பாற்ற உக்ரைன் ஜனாதிபதி விடுத்த கோரிக்கை

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமாகக் கருதப்படும் கார்கிவில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
அத்துடன் இந்த தாக்குதலில், 42 பேர் காயமடைந்துள்ளனர்.
ரஷ்ய வழிகாட்டலின் கீழ் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், உயிர்களைக் காப்பாற்றுவதற்காக நீண்ட தூரம் தாக்கும் திறன்கொண்ட ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தமது நட்பு நாடுகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
(Visited 23 times, 1 visits today)