இலங்கையில் வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை – 2 இலட்சம் ரூபாய் அபராதம்
இலங்கையில் வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
2 இலட்சம் ரூபா வரை இந்த அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்திற்கு அமைவாக அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கு அபராதத் தொகைக்கு மேலதிகமாக ஒரு வருடத்திற்கும் மேற்படாத விளக்கமறியல் விதிக்கப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு 1981 ஆம் ஆண்டின் 15 இலக்க சட்டத்தின் 76 ஆவது சரத்திற்கு அமைவாக இதற்கு முன்னர் 500 ரூபா அபராதத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது
(Visited 11 times, 1 visits today)





