மற்றவர்களின் சுதந்திரத்தை மதிக்கும் அழகான கதை

தென் கொரியாவிலிருந்து அமெரிக்காவிற்கு 10 மணி நேர விமானத்தில் வரும் ஒரு சிறிய குழந்தையுடன் தாய் இந்த சிறிய பையை விமானத்தில் உள்ள அனைவருக்கும் கொடுக்கிறார்.
அந்த பையில் ஒரு சூயிங்கம் மற்றும் சத்தத்தை தடுக்க ஒரு சிறிய காதுகளுக்கு வைக்காம சாதனம் உள்ளது.
அதே சமயம் அந்த பையில் ஒரு சின்ன குறிப்பும் இருக்கிறது. அதில்,
“நான் ஜிங் வூ. எனக்கு வயது 4 மாதங்கள். நான் இன்று என் அம்மா மற்றும் பாட்டியுடன் அமெரிக்கா செல்கிறேன்.
இது எனது முதல் விமானம் என்பதால் எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது. முடிந்தவரை அமைதியாக இருக்க முயற்சிப்பேன்.
ஆனால் நான் பயந்து அழுகிறேன் என்றால், என்னை மன்னித்து விடுங்கள்.
நான் மிகவும் சத்தமாக அழுதால், இந்த இரண்டு செருகிகளையும் பயன்படுத்துங்கள், உங்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
(Visited 35 times, 1 visits today)