தென்னாப்பிரிக்காவில் பெண்களை கொன்று பன்றிக்கு இறையாக்கிய 03 ஆடவர்கள்!
தென்னாப்பிரிக்காவில் இரண்டு பெண்களைக் கொன்று, அவர்களை பன்றிக்கு இறையாக்கிய மூவர் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று (12.09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
பண்ணையின் உரிமையாளர் ஜகாரியா ஜோஹன்னஸ் ஆலிவியர், மேற்பார்வையாளர் அட்ரியன் ருடால்ப் டி, மற்றும் ஊழியர் வில்லியம் முசோரா ஆகியோரே இந்த குற்றச்சாட்டின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த முசோரா சட்டவிரோதமாக தென்னாப்பிரிக்காவிற்கு பிரவேசித்துள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண்களான லோகாடியா என்ட்லோவ் மற்றும் மரியா மக்கதோ ஆகியோர் ஆகஸ்ட் மாதம் வடக்கு மாகாணமான லிம்போபோவில் உள்ள ஒலிவியரின் பண்ணையில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்பட்டு அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)