அடுப்பு கரி கொண்டு சென்ற லாரி விபத்து
உத்திரமேரூர் அருகே களியாம்பூண்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் இரும்பு தொழிற்சாலைக்கு சென்னை துறைமுகத்திலிருந்து அடுப்பு கரி கொண்டு சென்ற கனரக லாரி ஒன்று இன்று அதிகாலை உத்திரமேரூர் வந்தவாசி சாலையில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது உத்திரமேரூர் அங்காளம்மன் கோவில் அருகே சென்றபோது லாரி ஓட்டுனர் லோகேஸ்வரன் (40),
கட்டுப்பாட்டை இழுந்து திடீரென சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர் மீது மோதி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் சிறு காயங்களோடு உயிர் தப்பினர்.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் ஓட்டுநர் லோகேஸ்வரனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர்,
இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இச்சம்பவத்தால் உத்திரமேரூர் வந்தவாசி சாலை இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.