அதிகரித்து வரும் online பயன்பாடு : மூடப்படும் வங்கிக் கிளைகள்!
பாங்க் ஆஃப் அமெரிக்கா உள்ளுர் வங்கிக் கிளைகளை மூடுவதாக அறிவித்திருந்தது.
இதற்கமைய கடந்த ஆகஸ்ட் மாதம் 04 முதல் 18 ஆம் திகதிக்கு இடையில் 40 இற்கும் மேற்பட்ட வங்கிக்க கிளைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றுள்ள Chase, Wells Fargo and Santander ஆகிய முக்கிய வங்கிக் கிளைகளும் மூடப்பட்டுள்ளன.
கலிபோர்னியாவில் இருந்து நியூ ஜெர்சி வரையிலான பகுதிகளில் உள்ள பல வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளதாக நாணயக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு (OCC) உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் சேவைகளே இந்நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது. பெரும்பாலான அமெரிக்கர்கள் மதிய உணவு நேரத்தில் அல்லது வார இறுதி நாட்களில் வங்கிக்குச் செல்வதை விட வசதியாகக் கருதுவதாக கருத்து கணிப்புகளும் கூறுகின்றன.
இம்முறை வளர்ச்சியடையும்போது பல ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளிலும் வங்கிக் கிளைகள் மூடப்படுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.