இரட்டைக்கொலை வழக்கில் கொலையாளிகள் கைது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி மாப்படைச்சான் ஊரணி வீதியை சார்ந்தவர் ஆ.பழனியப்பன்((54),
கட்டட பொறியாளரான இவருக்கு கரூரில் ஆசிரியையாக பணிபுரியும் உஷா என்ற மனைவியும், சிரிராம் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 23:12:2023 அன்று இரவு பழனியப்பன் பூர்வீக வீட்டில் வசிக்கும் அவரது தாயார் சிகப்பிக்கு(75) உணவு வழங்கசென்றுள்ளார்.
அப்போது பழனியப்பன் மற்றும் சிகப்பி இருவரும் மர்மநபர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டு வீட்டிலிருந்த தங்க நகை 3 1/4 பவுன் கொள்ளையடிக்கப்பட்டது.
இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அறிவுருத்தலின் பேரில் கூடுதல் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் சுமார் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில் பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான்,
காவல் ஆய்வாளர் தனபாலன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வேந்தன்பட்டி அருகே உள்ள இடையபுதூர் பேருந்துநிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான நிலையில் நின்றுகொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் கிங்கம்புணரி வட்டம் கல்லங்காலப்பட்டி கிராமத்தை சார்ந்த சி.சக்திவேல்(33),
மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் உருவாட்டி மாவிலிக்கோட்டை கிராமத்தை சார்ந்த சு.அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர்(36) ஆகியோரை பிடித்து விசாரித்தபோது,
அவர்கள் நகை மற்றும் பணத்திற்காக பொறியாளர் பழனியப்பன் மற்றும் தாயார் சிகப்பியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து அவர்களிடமிருந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கொலை செய்ய பயன்படுத்திய கட்டை மற்றும் கையுறை ஆகியவை கைபற்றப்பட்டது.
குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பாராட்டினார்.