நான் ஜனாதிபதியானால் வாகனங்களின் விலையை 80 வீதம் குறைப்பேன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் ஜனாதிபதியானால் இலங்கை சந்தையில் வாகனங்களின் விலையை எண்பது வீதத்தால் குறைக்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வாகன விலைகளை குறைக்கும் திட்டம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கார் தாம் ஜனாதிபதியான பின்னர் சுமார் இருபத்தி இரண்டு இலட்சம் ரூபாவிற்கு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.





