பெலாரஷில் 30 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு : ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை!
பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, “போராட்டம் தொடர்பான குற்றங்களுக்காக” சிறை தண்டனை அனுபவித்து வந்த 30 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
கடந்த 03 மாதங்களில் மூன்றாவது முறையாக கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டவர்களில் ஏழு பெண்களும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னிக்கப்பட்ட அனைவரும் “தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், உண்மையாக மனந்திரும்பி, சட்டத்தை மதிக்கும் வாழ்க்கையை நடத்துவதாக உறுதியளித்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பெலாரஸில் சுமார் 1,400 அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், இதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற Ales Bialiatski மற்றும் போலந்து செய்தித்தாள் பத்திரிகையாளர் Andrzej Poczobut உட்பட பலர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
வியாஸ்னா மனித உரிமைகள் மையத்தின்படி, குறைந்தது ஆறு அரசியல் கைதிகள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.