இந்தோனேசியாவை சென்றடைந்த போப் பிரான்சிஸ்
கத்தோலிக்க சமய குருவான போப்பாண்டவர் பிரான்சிஸ், தமது ஆசிய பசிபிக் வட்டாரப் பயணத்தின் முதல் அங்கமாக இந்தோனேசியா சென்றடைந்தார்.
பெரும்பான்மை முஸ்லிம்களைக் கொண்ட இந்தோனீசியாவில் தொடங்கி அவர் நான்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார்.
இதுவே 87 வயது போப் பிரான்சிஸ் மேற்கொள்ளவிருக்கும் தொலைதூரப் பயணமாகும்.
அவரின் இப்பயணம், சமயங்களுக்கு இடையிலான உறவுகளைக் கருத்தில்கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தோனீசியாவில் மூன்று நாள்கள் இருக்கவுள்ள போப் பிரான்சிஸ், அதற்குப் பிறகு பாப்புவா நியூ கினி, கிழக்கு தீமோர், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் செல்வார்.
போப் பிரான்சிஸ், இந்தோனீசியாவில் அதிபர் ஜோக்கோ விடோடோ உள்ளிட்டோரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 56 times, 1 visits today)





