மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்கு 10 மில்லியன் பவுண்டுகள் செலவு
மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கான செலவு சுமார் 10 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் எனவும் அந்த தொகையை பிரித்தானிய அரசே செலுத்துவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதற்கு காரணம் அனைத்து அரச விழாக்களுக்குமாக நிதியை அரசே செலுத்துவதுடன் முடிசூட்டு விழாவும் ஒரு அரச நிகழ்வு ஆகும்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பிரித்தானிய மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், இவ்வாறான நிலையில் பிரித்தானிய மக்களின் வரிப்பணத்தில் இருந்து 10 மில்லியன் பவுண்களை பிரித்தானிய அரசாங்கம் முடிசூட்டு விழாவிற்கு செலவிடத் தயாராக இருப்பதாகவும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட பிரிட்டன் குடிமக்களில் பாதிக்கும் மேற்பட்டோர், சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு பிரித்தானிய அரசு செலவிட்டதை ஏற்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் காட்டியுள்ளன.
மேலும், முடிசூட்டு விழா நடைபெறும் மே 6ம் திகதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே வங்கி விடுமுறைக்கு பிரிட்டனுக்கு 2.3 பில்லியன் பவுண்டுகள் செலவாகும் என பொருளாதார மற்றும் வணிக ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முடிசூட்டு விழாவின் போது ராணி கமிலா சர்ச்சைக்குரிய கோஹினூர் வைரத்தை அணிய மாட்டார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மன்னராட்சியை விரும்பாதவர்கள் முடிசூட்டு தினத்தன்று பிரிட்டன் முழுவதும் போராட்டங்களை நடத்தவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.