சிங்கப்பூரில் அதிகரிக்கும் மோசடி – சிக்கிய 346 பேர்
சிங்கப்பூரில் மோசடிக் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 346 பேர் விசாரிக்கப்படுகின்றனர்.
அவர்களில் 231 பேர் ஆண்கள், 115 பேர் பெண்களாகும். அவர்கள் 16 வயதுக்கும் 76 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் காவல்துறை நிலப் பிரிவுகளும் இணைந்து இம்மாதம் 16ஆம் திகதி முதல் நேற்று வரை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டன.
அது குறித்துச் சிங்கப்பூர் பொலிஸார் இன்று அறிக்கை வெளியிட்டது. விசாரிக்கப்படும் 346 பேர் 1,300க்கும் அதிகமான மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் 13.8 மில்லியன் வெள்ளிக்கும் மேல் பறிகொடுத்ததாக நம்பப்படுகிறது. மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 10 ஆண்டுக்காலச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
(Visited 3 times, 1 visits today)