22 டன் குட்கா பறிமுதல் விற்பனையாளர் தப்பி ஓட்டம்
குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களில் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்து வந்து சப்ளை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து குன்றத்தூர் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் திருமுடிவாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா வாகனங்களில் மாற்றப்படுவதாக குன்றத்தூர் போலீஸ்காரர் காந்தி என்பவருக்கு வந்த தகவலின் பேரில் குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் தலைமையில் சென்ற போலீசார் திருமுடிவாக்கம் சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாகனங்களை சோதனை செய்தபோது அங்கிருந்த நபர்கள் தப்பி ஓடினார்கள்.
அவர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்றும் முடியாததால் அங்கிருந்த ஏழு வாகனங்களை சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டை,மூட்டையாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து 7 வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்டது ரூ.1 கோடி மதிப்புள்ள 22 டன் குட்கா என்பதும் வாகனங்களில் எடுத்து வந்தவர்கள் இங்கிருந்து கடைகளுக்கு சப்ளை செய்ய நிறுத்தி வைத்திருந்தது தெரியவந்ததாகவும்,
மேலும் குட்காவுடன் வாகனங்களை விட்டு சென்ற நபர்கள் யார் என்பது குறித்து கண்டறிய 5 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருவதாகவும் பெங்களூரில் இருந்து தடை செய்யப்பட்ட குட்காவை மொத்தமாக எடுத்து வந்து இரவு நேரங்களில் திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில் வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.