நைஜீரியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 179 பேர் பலி
நைஜீரியாவில் சில வாரங்கள் பெய்த கடுமையான மழைக்குப் பிறகு வெள்ளத்தில் 179 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் சுமார் 200,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அவசரகால அதிகாரி தெரிவித்தார்.
நைஜீரியாவின் வடக்குப் பகுதியில்தான் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 107,600 ஹெக்டேர் (265,885 ஏக்கர்) விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்று தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் (NEMA) வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
பெரும்பாலான இறப்புகள் நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் இருந்தன, ஆனால் செய்தித் தொடர்பாளர் Ezekiel Manzo நைஜீரியாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகள் மழை தீவிரமடைவதால் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
இறப்புகள் மற்றும் இடப்பெயர்வுகள் எப்போது நிகழ்ந்தன என்பதை சரியாகக் கூறவில்லை.
முக்கிய நதிகளான நைஜர் மற்றும் பெனுவின் கரையில் உள்ள சமூகங்கள் அதிக ஆபத்தில் உள்ளன. நாட்டின் சில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்று முன்னர் அறியப்படவில்லை என்று மான்சோ தெரிவித்தார்.