இந்தியா- உத்தரப் பிரதேசத்தில் குழந்தைகளைக் கொல்லும் ஓநாய்கள்; மக்கள் அச்சம்
உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ளது மஹசி.அங்கு கடந்த சில நாள்களாக ஓநாய்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. மஹசியின் கிராமத்து பகுதியில் ஓநாய் கூட்டம் ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது.அவை இரவு நேரங்களில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளை, கவ்வி கொண்டு காட்டு பகுதிக்குள் ஓடி விடுகிறது.
இதுவரை 8 குழந்தைகள் ஓநாய் கூட்டத்தின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன. மேலும் பெண் ஒருவரும் ஓநாய்களால் கொல்லப்பட்டுள்ளார்.கடந்த 45 நாள்களில் மட்டும் ஓநாய் தாக்குதலால் அவ்வட்டாரத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், இரவு நேரங்களில் சுற்றுக்காவல் பணியைத் தொடங்கியிருக்கின்றனர்.இதுவரை 3 ஓநாய்கள் பிடிபட்டு உள்ளன. வனத்துறையினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
ஓநாய்களைப் பிடிக்க கேமராவுடன் கூடிய ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பாதுக்காப்பு நடவடிக்கைகள் அதிகரித்தாலும் ஓநாய் கூட்டத்தின் தாக்குதல் தொடருவது அந்த பகுதி மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. அதனால் அவர்கள் தூக்கத்தை இழந்து தவித்து வருகின்றனர்