ஜீரோ கோவிட் திட்டம் ;சீனாவில் தொடரும் வேலையில்லா திண்டாட்டம்
சீனாவில் வேலைவாய்ப்பு குறைவாக இருப்பதால், அந்நாட்டு இளைஞர்கள் வேலை வேண்டி வழிபாட்டு தலங்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது.
சீனாவில் கொரோனா ஊடரங்கிற்கு பின்பு பொருளாதார நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்நாட்டு அரசால் கொண்டு வரப்பட்ட ஜீரோ கோவிட் திட்டத்தின் மூலம் தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனை தொடர்ந்து அந்நாட்டில் வேலை வாய்ப்புகள் உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஜீரோ கோவிட் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, கடந்த ஓராண்டில் மட்டும் 11.50 மில்லியன் பட்டதாரிகள், வேலையில்லாமல் தவித்து வருகின்றனர் என தெரியவந்துள்ளது.இந்நிலையில் சீனாவின் வழிப்பாட்டு தலங்களில் கடந்த ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கின் படி 2021ஆம் ஆண்டை விட அதிகமாக 310% பேர் வருகை புரிந்துள்ளனர். இதில் 1990ஆம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் அதிகம் என கணக்கெடுப்பு கூறுகிறது.
வேலை வாய்ப்பின்மையால் இளைஞர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாவதை கட்டுப்படுத்தவும், வேலை கிடைக்கவும் வேண்டி வழிப்பாட்டு தலங்களுக்கு செல்கின்றனர்.சீனாவில் பொதுவாக பட்டதாரிகளை விட முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். மேலும் அவர்கள் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. இதனால் அந்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.