ஐரோப்பா

ரஷ்யாவை கைப்பற்ற இறுதி திட்டத்தைத் தயாரித்த உக்ரைன்

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான வெற்றித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், அதற்கான திட்டம் அடுத்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனிடம் கையளிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ரஷ்யாவின் கிர்குக் பகுதியை தனது படைகள் ஆக்கிரமித்ததாக அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவிற்கு எதிரான தனது திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரிடம் முன்வைக்கவுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தனது திட்டத்தின் வெற்றி அமெரிக்காவின் முடிவால் தீர்மானிக்கப்படும் என உக்ரைன் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில், உக்ரேனியப் படைகள் ரஷ்யாவின் கிர்குக் பகுதியை ஆக்கிரமித்தன.

உக்ரேனிய இராணுவத் தலைவர்களின் தரவுகளின்படி, அவர்கள் ஆக்கிரமித்துள்ள ரஷ்யாவின் பிரதேசம் 1,294 சதுர கிலோமீட்டர் ஆகும்.

மேலும், உக்ரேனியப் படைகள் நூறு கிராமங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

எவ்வாறாயினும், ரஷ்ய பிரதேசத்தை தொடர்ந்து ஆக்கிரமிக்க விரும்பவில்லை என்றும் உக்ரைன் கூறுகிறது.

உக்ரேனியப் படைகள் ரஷ்யப் பகுதிக்குள் படையெடுத்து ஏறக்குறைய ஒரு மாதம் கடந்தும், ரஷ்யப் படைகளால் இதுவரை அவர்களை விரட்ட முடியவில்லை.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!