பாரிஸ் விமான நிலையத்தில் Telegram செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி கைது
Telegram செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி செல்வந்தர் பேவல் டூரோவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரிஸ் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அஸெர்பைஜானிலிருந்து அவரது தனிப்பட்ட விமானத்தில் வந்து இறங்கியபோது பாரிஸில் அவர் கைதானதாகத் தெரிகிறது.
Telegram தளத்தில் போதுமான நெறியாளர்கள் இல்லை. எனவே அதில் இடம்பெறும் குற்றச்செயல்கள் கண்காணிக்கப்படுவதில்லை என்று காவல்துறை நம்புகிறது.
ரஷ்யாவைச் சேர்ந்த டூரோவ் துபாயில் Telegram தளத்தைத் தொடங்கினார். அவர் தொடங்கிய VK சமூக ஊடகத் தளத்தை எதிர்க்கட்சியினர் பயன்படுத்துவதைத் தடுக்குமாறு ரஷ்ய அரசாங்க உத்தரவிட்டது. அதை ஏற்க மறுத்து அவர் ரஷ்யாவைவிட்டு 2014இல் வெளியேறினார்.
Facebook, YouTube, WhatsApp, Instagram, TikTok, Wechat ஆகியவற்றுக்கு அடுத்துப் பெரிய சமூக ஊடகத் தளமாக Telegram கருதப்படுகிறது. அடுத்த ஆண்டுக்குள் ஒரு பில்லியன் பேரை அடைய வேண்டும் என்று அது திட்டமிடுகிறது.