SLvsENG Test – இங்கிலாந்து அணிக்கு 205 ஓட்டங்கள் இலக்கு
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ஆல் அவுட்டானது. தனஞ்ஜெயா டி சில்வா 74 ரன்னும், மிலன் ரத்னாயகே 72 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், சோயிப் பஷீர் தலா 3 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து 122 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஜேமி ஸ்மித் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 111 ரன்னில் அவுட்டானார். ஹாரி ப்ரூக் 56 ரன்னும், ஜோ ரூட் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணி சார்பில் அஷிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2வது இன்னிங்சை ஆடியது. தொடக்கத்தில் முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். ஏஞ்சலோ மேத்யூஸ் 65 ரன்னில் அவுட்டானார்.
கமிந்து மெண்டிஸ் தனி ஆளாகப் போராடி சதமடித்து அசத்தினார். அவர் 113 ரன்களில் ஆட்டமிழந்தார். தினேஷ் சண்டிமால் 79 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், மேத்யூ பாட்ஸ் 3 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.