ஜெர்மனியில் தொழிலாளர் பற்றாக்குறை – வெளிநாட்டவர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு
ஜெர்மனியில் தொழிலாளர்களின் பற்றாக்குறை தொடர்ச்சியாக நிலவி வருவதால் நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது..
ஜெர்மனியில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டும் பற்றாக்குறை உள்ளதாக தெரியவில்லை.
இதற்கு காரணமாக சாதாரண விற்பனையாளர்களுடைய விற்பனை நிலையங்களில் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு பற்றாக்குறை நிலவும் என்று தெரியவந்துள்ளது.
2027 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் சாதாரண விற்பனை தொழிலாளர்களில் 37000 க்கு மேற்பட்ட வெற்றிடங்கள் ஏற்படும் என்றும் தரவுகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பாலர் பாடசாலைகளில் குழந்தைகளை கவனிப்பதற்குரிய பயிற்றப்பட்ட பயிற்சியாளர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
2027 ஆம் ஆண்டு இவர்களின் தொகையானது 27600 ஆக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
பாடசாலைகளிலும் கல்வி கற்பிப்பதற்காக ஜெர்மன் அரசாங்கமானது வெளிநாடுகளில் இருந்து இவ்வாறு பயிற்றப்பட்ட ஆசிரியர்களை அழைப்பதற்கு அரசாங்கம் முன் வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த பற்றாக்குறைகளை ஈடு செய்வதற்கு ஜெர்மன் அரசாங்கம் பல முயற்சிகளை மேறடகொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.