”உலகின் இளைய தொடர் கொலையாளி” : இந்தியாவில் நிகழ்ந்த துயரம்!
மூன்று குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், வெறும் எட்டு வயது சிறுவன், ‘உலகின் இளைய தொடர் கொலையாளி’ என்று அழைக்கப்பட்டான்.
2007 ஆம் ஆண்டில், இந்தியாவின் பீகாரில் உள்ள முஷாஹர் என்ற சிறிய கிராமத்தில், ஒரு தாய் தனது ஆறு மாத மகள் காணாமல் போனதாக உள்ளூர் காவல்துறையிடம் புகார் அளித்தபோது குறித்த சிறுவன் தொடர்பான விபரங்கள் வெளியாகியது.
கொலை நடந்த இடத்திற்கு அமர்ஜீத் சதா என்ற சிறுவன் பொலிஸாரை அழைத்துச் சென்ற நிலையில், குறித்த சிறுவனிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின்போது ஆறு மாத குழந்தையை மட்டுமல்ல, எட்டு மாத வயதுடைய அவரது சொந்த சகோதரியையும், ஒன்பது மாத வயதுடைய உறவினரையும் கொன்றதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சதா காவலில் வைக்கப்பட்ட நிலையில், அந்த சிறுவன் ‘மனநல கோளாறுகளால்’ பாதிக்கப்பட்டுள்ளான் என்று போலீசார் உறுதிப்படுத்தினர்.
எவ்வாறாயினும் கொலை இடம்பெற்ற காலப்பகுதியில் அவர் சிறுவராக இருந்தமையால் அவருக்கு தண்டனைகளை வழங்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. அதற்கு பதிலாக அவர் வீட்டிலேயே தடுத்து வைக்கப்பட்டதாக தி கார்டியன் தெரிவித்துள்ளது.