உலகின் மிகவும் வயதான பெண்மணி மரியா பிரான்யாஸ் 117 வயதில் காலமானார்
உலகின் மிக வயதான நபரான மரியா பிரான்யாஸ் 117 வயதில் ஸ்பானிய முதியோர் இல்லத்தில் காலமானார்.
அவர் இரண்டு உலகப் போர்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்வுகளின் மூலம் வாழ்ந்தார்.
கடந்த 2 தசாப்தங்களை கட்டலோனிய முதியோர் இல்லத்தில் கழித்த இவர், 2023இல் கின்னசால் அங்கீகரிக்கப்பட்டிருந்தார்.
முதியோர் இல்லத்தின் செய்தித் தொடர்பாளர் மற்றும் அவரது உத்தியோகபூர்வ சமூக ஊடக கணக்கு பிரன்யாஸ் தூக்கத்தில் இறந்துவிட்டதாகக் தெரிவித்தார்.
மரியா பிரான்யாசின் மறைவு தொடர்பாக அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள பதிவில், “மரியா பிரான்யாஸ் மோரேரோ வயது 117. எங்களை விட்டு பிரிந்துவிட்டார். அவர் விரும்பியபடியே தூக்கத்தில், அமைதியாகவும், நிம்மதியாகவும், வலியின்றி இறந்தார். மரியாவின் அறிவுரை மற்றும் கருணைக்காக நாங்கள் எப்போதும் அவர்களை நினைவில் கொள்வோம்” என்று தெரிவிக்கப்பட்டது.
பிரன்யாஸ் இந்த வார தொடக்கத்தில் தனது வாழ்க்கையின் முடிவில் இருப்பதாக யூகித்திருந்தார், ஒரு சமூக ஊடக இடுகையில், “நான் பலவீனமாக உணர்கிறேன். நேரம் வருகிறது. அழாதே, எனக்கு கண்ணீர் பிடிக்காது, என்னை உனக்கு தெரியும், நான் எங்கு சென்றாலும், நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என தெரிவித்திருந்தார்.