ஆப்பிரிக்கா முக்கிய செய்திகள்

சூடானின் பாதுகாப்பு நிலவரங்களை ஆராயுமாறு ஐநா வலியுறுத்தல்!

சூடானில் மோதலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை ஆராயுமாறும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைவரிடம் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று நள்ளிரவுடன் முடிவடையவிருந்த 72 மணிநேர போர்நிறுத்தத்தை மேலும் நீடிப்பதாகக் கூறிய இரு தரப்பினரும் தொடர்ந்தும் போராடி வருகின்ற நிலையில் அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

சூடான் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களும் எதிர்கொள்ளும் உடனடி மற்றும் நீண்டகால விளைவுகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை போரிடும் இரண்டு தரப்பும் பொதுமக்கள் மற்றும் உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும்இ தப்பியோடிய பொதுமக்களை பாதுகாப்பாகக் கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் கார்ட்டூமில் மேலும் மக்கள் உணவு தண்ணீர் மற்றும் எரிபொருளுக்கு தொடர்ந்தும் போராடிவரும் சூழலில் போக்குவரத்துச் செலவு அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் தலைவர் மார்ட்டின் கிரிபித்ஸ் கூறியுள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு