இனி பச்சை இல்லை – WhatsAppஇல் ஏற்பட்டுள்ள மாற்றம்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப அம்சங்களை வழங்குகிறது.
அந்த வகையில், பிசினஸ் அக்கவுண்ட், சேனல்களுக்கு வெரிவிக்கேஷன் பேட்ஜ் வழங்குகிறது. அதாவது அந்த அக்கவுண்ட் அதிகாரப்பூர்வமானது என்பதை குறிக்க இந்த பேட்ஜ் வழங்கப்படுகிறது. X, இன்ஸ்டா உள்ளிட்ட தளங்களிலும் இது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், வாட்ஸ்அப்-ல் தற்போது பச்சை நிறத்தில் வழங்கப்படும் இந்த பேட்ஜ், ப்ளூ நிறத்திற்கு மாற்றப்படுவதாக மெட்டா அறிவித்துள்ளது.
மெட்டா அதன் அனைத்து தளங்களிலும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றுடன் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் (uniformity) என்பதற்காக இந்த மாற்றத்தை செய்வதாக அறிவித்துள்ளது.
மேலும், ப்ளூ டிக் அடையாளம் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும், மோசடிகளை தடுத்து வணிகங்கள் மற்றும் சேனல்களுக்கு பாதுகாப்பான தளமாக இருக்கும் என்று கூறியுள்ளது.