இலங்கை ஜனாதிபதித் தேர்தல் : கட்டுப்பணம் செலுத்திய 32 வேட்பாளர்கள்!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஐந்து மேலதிக வேட்பாளர்களுக்கான பத்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (ஆகஸ்ட் 12) உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (13) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
வேட்புமனுக் கோரல் எதிர்வரும் 15ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் 11 மணி வரை இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் இராஜகிரிய பகுதியிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதனை அண்மித்த பகுதியில் விஷேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
(Visited 65 times, 1 visits today)