மனைவியிடம் சொல்லாமல் மலையேற சென்றவர் உயிரிழப்பு

தெஹியோவிட்டவிலிருந்து கம்பளைக்கு வந்து அம்புலுவாவ மலையில் தவறான பாதையில் ஏறச் சென்ற நபரொருவர் மீது பாரிய கல் விழுந்ததில் அந்நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நான்கு பேர் கொண்ட குழுவொன்று மலை ஏற சென்றதாகவும் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெஹியோவிட்ட முருத்தெட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே (வயது 37) உயிரிழந்துள்ளார்.
மனைவியிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய அவர், நண்பர்கள் நான்கு பேருடன் இந்த சுற்றுலா வந்தது தெரியவந்துள்ளது.
(Visited 34 times, 1 visits today)