வட அமெரிக்கா

ஒரே நாளில் 15 கின்னஸ் உலக சாதனைகளை படைத்த “சீரியல் ரெக்கார்ட் பிரேக்கர்” என அழைக்கப்படும் அமெரிக்கர் !

அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தைச் சேர்ந்தவர் டேவிட் ரஷ். ‘சீரியல் ரெக்கார்டு பிரேக்கர்’ என அழைக்கப்படும் இவர், கின்னஸில் இதுவரை 250 உலக சாதனைகளை முறியடித்துள்ளார். இந்த நிலையில், அவர் ஒரேநாளில் 15 சாதனைகளை நிகழ்த்தி கின்னஸ் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளார்.

இதுகுறித்து கின்னஸ் ரெக்கார்டு பக்கத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோவில், அவர் முதலில் ஜக்கிலிங் வித்தை எனப்படும் 3 ஆப்பிள் பழங்களை ஒன்றன்பின் ஒன்றாக உயரே தூக்கிபோட்டு ஒரு நிமிடத்துக்குள் அதிக முறை கடித்துள்ளார். 198 முறை ஆப்பிள்களை கடித்து துப்பிய அவர், அடுத்து டேபிள் டென்னிஸ் பந்துகளை 2 பாட்டில் மூடிகளில் 10 முறை மாற்று கைகளை பயன்படுத்தி வேகமாக துள்ளச் செய்கிறார். மிகவும் நூதனமான இந்தச் சாதனையை வெறும் 2.09 நிமிடங்களில் செய்து முடித்து அசத்தியுள்ளார்

அதேபோல் 30 வினாடிகளில் கையின் பக்கங்களை பேஸ்பாலால் மாறிமாறி அடித்த சாதனையையும் அவர் முறியடித்தார். அவர் 125 முறை பந்தினை இவ்வாறு அடித்து அசத்தினார். இதேபோன்று வாயிலிருந்து சுவரில் பந்தை அடித்து பிடித்தல், அமர்ந்தபடி பலூன்களை உடைத்தல், 30 வினாடிகளில் அதிக டி-ஷர்ட்கள் அணிதல், 10 டாய்லெட் பேப்பர் ரோல்களை ஒரே கையால் வேகமாக அடுக்கி வைத்தல், அதிக அளவு தண்ணீரை 30 வினாடிகளில் கைகளால் தள்ளிவிடுதல், ஒரு லிட்டர் எலுமிச்சை சாற்றை ஸ்ட்ரா மூலம் மிக வேகமாக குடித்தல் உள்ளிட்ட 15 வகைகளில் குறைந்த நிமிடத்தில் கின்னஸ் சாதனையை ஒரே நாளில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!