மத்திய கிழக்கில் போர் அபாயத்தைத் தணிக்க முடியாத நிலை
மத்திய கிழக்கில் போர் அபாயத்தைத் தணிக்க முடியாத அபாயம் ஏற்பட்டுள்ளது.
எல்லா வழிகளிலும் அரசதந்திர முயற்சி தீவிரமடைந்துள்ளது. இருப்பினும் நம்பிக்கையான அறிகுறிகள் தெரியவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இஸ்ரேல் மீது தாக்குல் நடத்த ஈரான் தீர்மானித்து விட்டதாக Jeruslem Post நாளேடு தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்குள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஆகாயப் படை விரைவான நடவடிக்கைக்குத் தயாராய் இருக்கவேண்டும் என்று இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் யொவேவ் கலான்ட் (Yoav Gallant) உத்தரவிட்டுள்ளார்.
தாக்குதலைத் தற்காக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் இஸ்ரேலிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
வட்டாரத்தில் பதற்றத்தைத் தூண்ட விரும்பவில்லை என்று கூறும் ஈரான், இஸ்ரேல் தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே டெஹ்ரானில் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஈரான் குற்றஞ்சாட்டுகிறது.