செய்தி விளையாட்டு

தங்கம் வென்ற ஜோகோவிச்சுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அல்காரசை வீழ்த்தி ஜோகோவிச் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

இந்நிலையில் ஜோகோவிச்சுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று நன்றாக முடித்துள்ளீர்கள் ஜோகோவிச். அல்காரஸ் ஒரு வலுவான போட்டியை வெளிப்படுத்தினார், அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது, ஆனால் ஜோகோவிச் சர்வீஸ் செய்யும் போதெல்லாம் அல்காரசிடம் தடுமாற்றம் இருந்தது. அதுவே ஜோகோவிச்சின் வெற்றிக்குக் காரணம் என்பது என் கருத்து. அல்கராஸ் டென்னிஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்த, அவர் தனது சர்வீசில் முன்னேற்றம் காண வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.

 

(Visited 36 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!