பிரித்தானியாவில் இரண்டாவது நாளாகவும் தொடரும் வன்முறை : மூத்த பொலிஸ் அதிகாரிகளை சந்திக்கும் பிரதமர்!
பிரித்தானியாவில் வெடித்துள்ள வன்முறைகள் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில், பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் இன்று மூத்த போலீஸ் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
இது தொடர்பில் பிரதம மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், எங்கள் தெருக்களில் தீவிர வன்முறை மற்றும் பொது ஒழுங்கின்மை போன்ற பல உயர்மட்ட சம்பவங்களைத் தொடர்ந்து அரசாங்கத்தின் முழு ஆதரவை அவர்களுக்கு வழங்குவதாக” கூறியது.
அமைதியான போராட்டத்திற்கான உரிமை எந்த விலையிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றாலும், வெறுப்பை விதைப்பதற்கும் வன்முறைச் செயல்களைச் செய்வதற்கும் அந்த உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளும் குற்றவாளிகள் சட்டத்தின் முழு வலிமையையும் எதிர்கொள்வார்கள் எனவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவுத்போர்ட் தாக்குதல்களில் சந்தேக நபர் இஸ்லாமியர் என்ற தகவல்கள் வெளியானதை தொடர்ந்து இனச் சார்ப்பு போராட்டங்கள் தலைத் தூக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.