116 மாகாண சபை உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க 116 மாகாண சபை உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 116 பேர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக தம்மை அர்ப்பணிப்பதாக 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (30) உறுதிப்படுத்தியிருந்தனர்.
கடுமையான அராஜகம், வரிசை யுகத்தை ஏற்படுத்தாத சமூக, அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சியுடன் கூடிய வலுவான நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதியால் மாத்திரமே இந்த முடிவை எடுத்ததாக எம்.பி.க்கள் தெரிவித்திருந்தனர்.
அமைச்சர்களான அலி சப்ரி, ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன, அனுர பிரியதர்ஷன யாப்பா, பிரியங்கர ஜயரத்ன, டி.பி ஹேரத், மஹிந்தானந்த அளுத்கமகே, பிரேமநாத் சி. தொலவத்த, ஜானக வக்கம்புர, ஜோன் செனவிரத்ன, டக்ளஸ் தேவானந்தா, மதுர விதானகே, ராஜிகா விக்கிரமசிங்க உள்ளிட்டோர் இதில் உள்ளடங்குகின்றனர்.