அதிபர் தேர்தல் நிலவரம் ; வெற்றியாளரை நிர்ணயிக்கும் மாநிலங்களில் கமலா ஹாரிஸ் முன்னேற்றம்
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான தற்போதைய துணை அதிபர் கமாலா ஹாரிஸ், அரசியல் கணிப்பாளர்கள் ஏழு மாநிலங்களில் நடத்திய கணிப்பில் ஆறு மாநிலங்களில் முன்னேறி வருவதாக ஜுலை 30 அன்று வெளியான தகவல்கள் காட்டுகின்றன.
அந்த ஏழு மாநிலங்களும் வெற்றியாளரை நிர்ணயிக்கக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் ஜுலை 24 முதல் 28 வரை நடத்தப்பட்ட கணிப்பில், மிச்சிகனில் 11 புள்ளிகளுடன் துணை அதிபர் முன்னிலை வகிக்கிறார். அரிசோனா, விஸ்கொன்சின், நிவேடா ஆகிய மாநிலங்களில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்பைவிட இரு புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளா கமாலா ஹாரிஸ்.
பென்ஸ்லைவேனியா நகரில் மட்டும் டிரம்ப் நான்கு புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். மேலும் விஸ்கொன்சின் மாநிலத்தில் பின்தங்கியிருந்த டொனால் டிரம்ப் தற்போது சமநிலையை நெருங்கிவருகிறார்.
இதே ஏழு மாநிலங்களில் ஜுலை 1 முதல் 5 வரை நடந்த கணிப்புகளில் அதிபர் ஜோ பைடன் மிச்சிகன், விஸ்கொன்சின் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே முன்னிலை வகித்தார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் டிரம்ப், மீதம் உள்ள ஐந்து மாநிலங்களில் முன்னிலையில் இருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.